கொம்பு தேன் மருத்துவ குணங்கள் 🐝




கொம்புத்தேன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய கொம்புத்தேன் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு.

கடுப்பு, கண் நோய்கள், காய்ச்சல் ஆஸ்துமா விக்கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது இந்த இந்த தேனி உட்கொண்டால் பசியை தூண்டும்  தேகம் பொலிவு பெறும். இவை சித்த மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது

விக்கல்  சோர்வு வாந்தி இருமல் போன்ற நோய்களுக்கு கொம்புத்தேன்  மருந்தாக பயன்படுகிறது. இது உடல்  உடல் உஷ்ணத்தை அதிக  படுத்துகிறது

ஜீரண மண்டலத்தை  பாதுகாக்கிறது.

இருமல் வாந்தி  கபம்  வயிற்று உபாதைகள் போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாய்வுத் தொல்லையில் இருந்து நீங்குவதோடு, வயிற்று உப்புசம் குறைந்து, ஒருவித புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி மற்றும் வலிமையை அதிகரிக்கச்  செய்யும்.

உடல் பருத்தவருக்கும், உடல் இளைத்தவருக்கும் தேனே சிறந்த மருந்தாக உள்ளது. உடல் பருமனானவர்கள் தினமும்  வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி விட்டு அருந்திவர, உடலிலுள்ள ஊளைச்சதை குறையும் பலம் அதிகரிக்கும்.

உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தும் சிறுநீர் பெருக்கத்தின் மூலம் முழுமையாக வெளியேற்றப்படும். உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றி, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களில் இருந்து  பாதுகாத்து, பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.

உடல் மெலிந்தவர்கள் இரவு உணவிற்குப் பின், ஒரு கப் பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி தேனை விட்டு அருந்திவர,  உடல்  பருமன் கிட்டும், ஆயுளும் நீடிக்கும்.

தேன் பருகுவதன் மூலம் பல தொற்று நோய்கள், மலேரியா, அம்மை போன்ற நோய்களை வரமால் தடுக்கலாம். பேரீச்சம்பழத்தைக் தேனில் ஊற வைத்து உண்பதால் நல்ல இரும்புச்சத்தோடு. தேனிலுள்ள சத்துக்களும் கிடைக்கும் அதுபோல்,  ரோஜா மலரிலுள்ள இதழ்களை தேனில் ஊறவைத்து உண்பதால், உடலுக்குபலமும், குளிர்ச்சியும், தாதுவிருத்தியும் உண்டாகும்.


இப்படிக்கு .VV Health Foundation.Reg.22/2022

Comments

Popular posts from this blog

venpulli siddha maruthuvam

கார்போக அரிசி எண்ணெய்